மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கால்நடை மருத்துவப் படிப்பு: கன்னியாகுமரி மாணவி முதலிடம்

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

News image
கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
Updated On :18 நவம்பர் 2020, 6:17 am

DIN

சென்னை: தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் தரவரிசைப் பட்டியலை தமிழக கால்நடைத் துறை அமைச்சர்  உடுமலை ராதாகிருஷ்ணன் சென்னையில் இன்று வெளியிட்டார்.

கால்நடை மருத்துவம் பயில விண்ணப்பித்த 15 ஆயிரம் பேரில், 13,901 விண்ணப்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக அமைச்சர் அறிவித்தார்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் பிவிஎஸ்சி பிரிவில் கன்னியாகுமரியைச் சேர்ந்த விஷ்ணுமாயா முதலிடம் பிடித்துள்ளார். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தர் இரண்டாம் இடத்தையும், கோவையைச் சேர்ந்த கோகிலா மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

பி.டெக்., பிரிவில் தர்மபுரியைச் சேர்ந்த சிவகனி முதலிடத்தையும், நாமக்கல்லைச் சேர்ந்த ரித்தி இரண்டாவது இடத்தையும், விழுப்புரத்தைச் சேர்ந்த நிவேதா மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு பட்டப்படிப்பு(பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்), உணவு, கோழியின மற்றும் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புகள் (பி.டெக்) பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. 2020 - 21-ம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறைகள்  இணையதள முகவரிகளில் கடந்த மாதம் மாதம் 24-ஆம் தேதி தொடங்கின. , விண்ணப்பிப்பதற்கான அவகாசம் அக்.9-ம் தேதியோடு நிறைவடைந்தது.

இந்த ஆண்டில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பங்கள் பரிசீலனை தொடங்கி கடந்த வாரம் நிறைவு பெற்ற நிலையில், இன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்குப் பின்னா் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.