சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெள்ளம் அபாயம்: குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய அரசு உத்தரவு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெள்ளம் அபாயம் ஏற்படும் குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய அரசு உத்தரவு அளித்துள்ளதையடுத்து பொதுமக்கள் காலி செய்ய மறுப்பு

News image
குன்னூரில் குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய மறுப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.
Updated On :19 நவம்பர் 2020, 8:22 am

DIN



நீலகிரி மாவட்டம் குன்னூரில் வெள்ளம் அபாயம் ஏற்படும் குடியிருப்பு பகுதிகளை காலி செய்ய அரசு உத்தரவு அளித்துள்ளதையடுத்து பொதுமக்கள் காலி செய்ய மறுப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் 34 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதனால் நிலச்சரிவு மற்றும் வெள்ளம் ஏற்படும் அபாயம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பல வீடுகள் உள்ளது.

இந்நிலையில், குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காலங்களில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் வருவாய் துறையினர் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி தற்போது ஆய்வு மேற்கொண்டு வெள்ளம் அபாயம் ஏற்படும் சுமார் 87 வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
 
இதனிடையே குன்னூர் அருகேயுள்ள எம்ஜிஆர் நகர், சித்தி விநாயகர் கோவில் தெரு, சுறா குப்பம் போன்ற பகுதிகளில் வீடுகள் ஓடைகளின் அருகில் கட்டப்பட்டுள்ளதால் மழை காலங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டு குடியிருப்புகள் முழுவதும் சேதம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக கூறி அப்பகுதிகளுக்கு காலி செய்யும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு குன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.