சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதி

அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

News image
அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கிய அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
Updated On :27 ஜனவரி 2024, 5:55 pm

DIN

புதுக்கோட்டை: அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் 11 பேருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.

அரசுப் பள்ளியில் படித்தோருக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டப்படி, புதுக்கோட்டையைச் சேர்ந்த 11 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயில இடம் கிடைத்தது.

இதன்படி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சை, குமரி, நெல்லை மருத்துவக் கல்லூரிகளில் இந்த மாணவர்கள் சேர்ந்தனர்.

Story image

அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம்பெற்ற 11 அரசுப் பள்ளி மாணவர்கள்.

இதற்கிடையே இவர்களுக்கான கல்விக் கட்டணத்தை தாம் ஏற்பதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் அறிவித்திருந்தார்.

இதன்படி, தலா ரூ. 50 ஆயிரத்துக்கான (மொத்தம் ரூ. 5.50 லட்சம்) காசோலைகளை வெள்ளிக்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.