பாஜகவில் இணைந்தார் கே.பி.ராமலிங்கம்
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.


திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.ராமலிங்கம் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவி முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம், பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி. ரவி மற்றும் பாஜக மாநில தலைவர் எல். முருகன் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பிற்பகலில் தமிழகம் வந்திருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக இந்த இணைப்பு நிகழ்ச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இது குறித்து சி.டி. ரவி தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படத்துடன் தகவல் வெளியிட்டுள்ளார். அதில், கே.பி. ராமலிங்கம் இணைந்திருப்பது கட்சிக்கு பலம் சேர்க்கும். கட்சியின் சார்பாக ராமலிங்கத்துக்கு வரவேற்பு தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...