நிவர் புயல்: எடப்பாடியில் செங்கல் சூளைகள் உற்பத்தி நிறுத்தம்
நிவர் புயல் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக, எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.


எடப்பாடி: நிவர் புயல் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ளும் விதமாக, எடப்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் தற்காலிகமாக உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
எடப்பாடி சுற்றுப்புறப்பகுதிகளான ஆடையூர், பக்கநாடு, ஆணைப்பள்ளம், ஆவணிப்பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் 500- க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கிவருகின்றன. இச்சூளைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சூளைகளில் தரைமோல்டு, டேபுள்மேல்டு, டபுள்மோல்டு உள்ளிட்ட பல்வேறு தரங்களில் செங்கல்கள் உற்பத்தி செய்யப்படுகிறன்றன.
இங்குள்ள செங்கல் சூளைகளில் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் செங்கல் உற்பத்தி செய்யப்பட்டு, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் உள்ள பெருநகரங்களில் நடைபெறும் கட்டுமான பணிகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

நிவர் புயல் முன்னெச்சரிக்கையாக, எடப்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளைகளில், உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், உற்பத்தி செய்யப்பட்ட செங்கல்களை பாதுகாப்பாக அடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
தற்போது தெற்கு வங்கக் கடலில் உறுவான நிவர் புயல், செவ்வாய் அன்று மாலை தீவிர புயலாக வழுப்பெறும் நிலையில், தொடர் கனமழையால் ஏற்படும் சேதத்தினை தவிர்த்திடும் நோக்கில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எடப்பாடி சுற்றுவட்டாரப்பகுதியில் இயங்கிவந்த செங்கல்சூளைகளில், தற்காலிகமாக செங்கல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்டுள்ள, சுடப்படாத பச்சை செங்கல்கள் , மழையால் சேதமடையாமல் பாதுகாத்திடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அடுத்து வரும் நாள்களில் தமிழகத்தில் தொடர்மழை பொழிவு இருக்கும் பட்சத்தில், செங்கல் விலை உயர வாய்ப்புள்ளதாக, இப்பகுதி செங்கல் உற்பத்தியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...