47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சங்ககிரி அருகே செட்டிக்காட்டில் புதிய கால்நடை மருந்தகம் கட்ட பூமி பூஜை

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, செட்டிக்காட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட செட்டிக்காட்டில் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பணியை புதன்கிழமை பூமி பூஜை செய்து தொடக்கி வைக்கிறார் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா. 
Updated On :25 நவம்பர் 2020, 11:56 am

DIN

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி, செட்டிக்காட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் புதிய கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. 

தேவண்ணகவுண்டனூர் ஊராட்சிக்குள்பட்ட செட்டிகாட்டில் 'நபார்டு' திட்டத்தின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக  கால்நடை மருத்துவமனை கட்டுவதற்கான பணிகளை சங்ககிரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ராஜா தலைமை வகித்து அடிக்கல் நாட்டி பூமி பூஜை செய்து தொடக்கி வைத்தார்.  

சங்ககிரி கால்நடை மருத்துவ உதவி இயக்குனர் முத்துக்குமார் வரவேற்றார். அதிமுக சேலம் புறநகர் மாவட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.வெங்கடாஜலம்,  கிழக்கு ஒன்றியச் செயலர் என்.சி.ஆர். ரத்தினம், துணைச் செயலர் மருதாசலம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் சுமதி, கால்நடை மருத்துவர் சுகவனம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.