புதுவையில் நாளையும் பொது விடுமுறை
நிவர் புயல் தாக்கம் காரணமாக புதுவையில் வியாழக்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் நாளையும் பொது விடுமுறை (கோப்புப்படம்)

புதுவையில் நாளையும் பொது விடுமுறை (கோப்புப்படம்)
புதுச்சேரி: நிவர் புயல் தாக்கம் காரணமாக புதுவையில் வியாழக்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரியில் புதன்கிழமை நள்ளிரவு அல்லது வியாழக்கிழமை காலையில் கரையைக் கடக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புயல் கரையைக் கடக்கும் சமயத்தில் 120 முதல் 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே புதன்கிழமை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வியாழக்கிழமையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாளில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும். பொது விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 19 ஆம் தேதி (சனிக்கிழமை) அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் என புதுவை அரசின் சார்பு செயலர் எம்.வி. கிரண் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...