ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்றக் கிளை அனுமதி 

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

News image
Updated On :26 நவம்பர் 2020, 1:19 pm

DIN

திருச்சி காந்தி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.  

கரோனா பரவல் காரணமாக திருச்சி காந்தி சந்தை மூடப்பட்டுள்ளது. பொன்மலை ஜி காா்னா் பகுதியில் தற்காலிகச் சந்தை செயல்படுகிறது. தற்போது காந்தி சந்தையைத் திறக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனா். காந்தி சந்தையால் திருச்சி நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க ரூ.77.6 கோடியில் கள்ளிக்குடியில் புதிய சந்தை வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாகத் திறக்கப்படாமல் உள்ளது. 

எனவே காந்தி சந்தையை நிரந்தரமாக மூடவும், கள்ளிக்குடியில் கட்டப்பட்டுள்ள புதிய சந்தை வளாகத்தைத் திறக்கவும் உத்தரவிட வேண்டும் என திருச்சியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திருச்சி காந்தி சந்தையைத் திறக்க இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிடப்பட்டிருந்தது. 

இதையடுத்து காந்தி சந்தையைத் திறக்க பிறப்பிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என காந்தி சந்தை வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் முறையீடு செய்யப்பட்டது. இதையேற்க மறுத்த நீதிபதிகள், கள்ளிக்குடி சந்தை தொடா்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைதிருந்தனா். இந்த நிலையில் இவ்வழக்கு இன்று நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது காந்தி மார்க்கெட்டை தற்காலிகமாக செயல்பட அனுமதி வழங்கி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அத்துடன் புதிதாக கட்டப்பட்டுள்ள கள்ளிக்குடி மார்க்கெட்டில் தற்போதுள்ள வசதி மற்றும் தேவைப்படும் வசதிகள் குறித்து அரசு மற்றும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிச.1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.