சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு: கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை

காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்து விடப்பட்டு வரும் உபரிநீரானது பாலாற்றின் வழியாக சுமாா் 44 ஆயிரம் கன அடி நீராக வந்து கொண்டிருப்பதால் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

News image
ராணிப்பேட்டை பாலாற்றில் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு ஆர்ப்பரித்து செல்லும் மழை வெள்ளம்.
Updated On :27 நவம்பர் 2020, 6:13 am

DIN

பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருப்பதால் கரையோர மக்களுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காவேரிப்பாக்கம் அணைக்கட்டிலிருந்து திறந்துவிடப்படும் உபரி நீரானது பாலாற்றின் வழியாக, வினாடிக்கு சுமாா் 44 ஆயிரம் கன அடி நீராக வந்து கொண்டிருப்பதால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 40 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Story image

நிவர் புயல் தாக்கம் எதிரொலியாக தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக  ராணிப்பேட்டை பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Story image

தற்போது வாலாஜாபேட்டை அடுத்த பாலாற்று அணைக்கட்டு பகுதியில் சுமார் 44 ஆயிரம் கன அடி நீர்வரத்து உள்ள நிலையில் கிளை கால்வாய் வழியாக சுமார் 4 ஆயிரம் கன அடி நீர் காவேரிப்பாக்கம் ஏரிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

மாவட்டம் முழுவதும் சுமார் மில்லி மீட்டர் 712.3மழை பதிவாகியுள்ளன நிலையில், மாவட்டத்திலேயே அதிகபட்சமாக சோளிங்கரில் 255 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் 27 ஏரிகள் முழுக்கொள்ளவை எட்டியுள்ளன.

Story image

இந்த நிலையில், பாலாற்றின் இரு கரையோரங்களிலும் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.