தங்கம் விலை சவரனுக்கு ரூ.296 குறைவு
சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.


சென்னையில் வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.296 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக உயா்ந்து வருகிறது.
இந்நிலையில், நவ.27-ம் தேதி காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.296 குறைந்து, ரூ.36,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.37 குறைந்து, ரூ.4,576 ஆக உள்ளது.
அதேநேரத்தில், வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.64.40 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.64,400 ஆகவும் விற்பனையாகிறது.
வெள்ளிக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,576
1 சவரன் தங்கம்...............................36,608
1 கிராம் வெள்ளி.............................64.40
1 கிலோ வெள்ளி.............................64,400
வியாழக்கிழமை விலை நிலவரம்
1 கிராம் தங்கம்............................. 4,613
1 சவரன் தங்கம்...............................36,904
1 கிராம் வெள்ளி.............................64.80
1 கிலோ வெள்ளி.............................64,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...