இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அந்தியூர் அருகே தகாத தொடா்பில் இருந்து வந்த காதல் ஜோடி தற்கொலை

அந்தியூர் அருகே திருமணமாகி தகாத தொடா்பில் இருந்து வந்த காதல் ஜோடி அவமானம் தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :28 நவம்பர் 2020, 4:44 am

DIN

பவானி: அந்தியூர் அருகே திருமணமாகி தகாத தொடா்பில் இருந்து வந்த காதல் ஜோடி அவமானம் தாங்காமல் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த ஜரத்தல், முரளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜயராகவன் (38).  இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 வயதுடைய ஒரு மகனும் உள்ளனர். அதே ஊரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி கலையரசி (28). இவருக்கு 10, 7 வயதில் இரு மகள்களும், 3 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

இருவரும் அண்ணன் தங்கை உறவு முறையாகும். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ள நிலையில் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாக தகாத தொடா் இருந்து வந்துள்ளது. இந்த தொடா்பு கிராம மக்களுக்கு தெரிய வந்ததை அடுத்து, இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். 

இதுகுறித்து தங்களின் உறவினரான கோகுல் என்பவருக்கு சொல்லிடப்பேசியில் வெள்ளிக்கிழமை இரவு தகவல் தெரிவித்துவிட்டு, அந்தியூர் கெட்டிசமுத்திரம் ஏரி அருகில் உள்ள சின்னாக்கவுண்டர் என்பவருக்குச் சொந்தமான கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். 

இத்தகவலின் பேரில் அந்தியூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒன்றோடு ஒன்று  கட்டப்பட்ட நிலையில் கிடந்த இருவரின் சடலங்களையும் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, அந்தியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.