வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஆப்பக்கூடல் அருகே கார் மோதியதில் தொழிலாளி பலி

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதியதில் உயிரிழந்தார்.

News image
Updated On :28 நவம்பர் 2020, 6:48 am

DIN

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் அருகே சாலையைக் கடக்க முயன்ற தொழிலாளி கார் மோதியதில் உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் அடுத்த ஓசைப்பட்டியை சேர்ந்தவர் முனியப்ப கவுண்டர் மகன் குருசாமி (60). பழைய பாட்டில் பொறுக்கும் வேலை செய்து வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஓசைப்பட்டி அருகே சென்றபோது, அந்தியூரிலிருந்து ஆப்பக்கூடல் நோக்கிச் சென்ற கார் மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட குருசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அப்பகுதியினர் குருசாமியை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதிக்கையில் குருசாமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. 

இதுகுறித்த புகாரின் பேரில் ஆப்பக்கூடல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.