டிச. 4 ஆம் தேதி சிவகங்கை செல்கிறார் முதல்வர் பழனிசாமி
கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.


கரோனா தடுப்புப் பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொள்கிறார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் முக்கிய வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.
இந்நிலையில் வருகிற டிசம்பர் 4 ஆம் தேதி முதல்வர் பழனிசாமி சிவகங்கை செல்கிறார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் முதல்வர், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதனிடையே மதுரையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டுவரும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...