ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை

சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை
Updated On :2 அக்டோபர் 2020, 9:56 am

DIN


சென்னை: சென்னையில் வரும் 5-ம் தேதி முதல் அத்தியாவசியப் பணியாளர்களுக்கு மட்டும் ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் அத்தியாவசிய சேவையில் இருப்போருக்கு மட்டும் அக்டோபர் 5-ம் தேதி முதல் புறநகர் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. அத்தியாவசியப் பணியாளர்கள் என்று மாநில அரசு அங்கீகரித்துள்ள நபர்கள் மட்டுமே இந்த ரயிலில் பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பணியாளர்களுக்காக குறைந்த அளவில் புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட் வழங்கப்படும்.  அதுமட்டுமல்லாமல், பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான், ரயில் நிலையத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்களுக்கு மட்டுமே ரயில் டிக்கெட் வழங்கப்படும்.  அதுமட்டுமல்லாமல், பயண அனுமதிக்கான அடையாள அட்டை இருந்தால்தான், ரயில் நிலையத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் யாரும் ரயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்களுக்கு ரயில் டிக்கெட் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் சென்னையில் புறநகர் ரயில் சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அத்தியாவசியப் பணியாளர்களுக்காக மட்டும் அக்டோபர் 5-ம் தேதி முதல் ரயில் சேவை தொடங்க உள்ளது. ரயிலில் பயணிக்கும் அத்தியாவசியப் பணியாளர்கள், தமிழக அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.