மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக திமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 300 போ் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனா

News image
கனிமொழி
Updated On :3 அக்டோபர் 2020, 6:06 am

DIN

அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக திமுக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் உள்பட 300 போ் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே அரசூர் ஊராட்சி இடைச்சிவிளையில் நடத்தப்பட்ட பொதுமக்கள் சபைக் கூட்டத்தில் தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று மனுக்களைப் பெற்றனர்.

இதையடுத்து, அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், அரசூர் ஊராட்சி தலைவர் தினேஷ் ராஜசிங் மற்றும் சாத்தான்குளம் திமுக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட 300 பேர் மீது தட்டார்மடம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.