நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ரயில் முன்பதிவுக்கு ஹிந்தி மொழியில் குறுஞ்செய்தி: ராமதாஸ் கண்டனம்

ரயில் முன்பதிவுக்கு ஹிந்தி மொழியில் குறுஞ்செய்தி வருவதற்கு  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News image

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

Updated On :4 அக்டோபர் 2020, 8:52 am

DIN

ரயில் முன்பதிவுக்கு ஹிந்தி மொழியில் குறுஞ்செய்தி வருவதற்கு  பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ரயில் முன்பதிவு செய்வோருக்கு ஹிந்தி மொழியில் குறுஞ்செய்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரயில்வேத்துறைக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

இதனிடையே இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது, ''தமிழ்நாட்டில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவுக்கான குறுஞ்செய்திகள் கடந்த இரு நாட்களாக ஹிந்தியில் அனுப்பப்படுகின்றன. ஹிந்தி பேசாத மக்களுக்கு ஹிந்தியில் குறுஞ்செய்தி அனுப்புவது திட்டமிட்ட ஹிந்தித் திணிப்பு ஆகும். இதை தொடர்வண்டித்துறை கைவிட வேண்டும்.

இந்திய அலுவல் மொழிச் சட்டம் -1976  தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது. இந்த சட்டத்தின் ’சி’ பகுதியில் சேர்க்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் அனைத்து அலுவல் சார்ந்த அறிவிப்புகளும் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட வேண்டும். அதை மீறி இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பியது கண்டிக்கத்தக்கது!

தமிழ்நாட்டில் ரயில் முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் அனுப்பப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டில் மத்திய அரசு சம்பந்தப்பட்ட அனைத்து அறிவிப்புகளும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.