தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. புதிதாக 5,447 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 6,35,855 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் இன்று 1,369 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 67 பேர் (தனியார் மருத்துவமனை -32, அரசு மருத்துவமனை -35) பலியானதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 9,984 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 5,524 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 5,80,736 பேர் குணமடைந்துள்ளனர். 45,135 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் இன்று 93,242 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 79,57,106 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் மேலும் 1 தனியார் ஆய்வகத்துக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் அரசு ஆய்வகங்கள் 66, தனியார் ஆய்வகங்கள் 124 என மொத்தம் 190 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது நம்பிக்கை இல்லை: ஈரான்

பிரசித் கிருஷ்ணா அபார பந்துவீச்சு; குஜராத் டைட்டன்ஸுக்கு 165 ரன்கள் இலக்கு!

புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி

சனி பிரதோஷம் ஏன் சிறப்பு வாய்ந்தது? முக்கியத்துவம் என்ன?
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை


