தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

எம்.எல்.ஏ. பிரபு திருமண விவகாரம்: சௌந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜா்

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரபு திருமணம் செய்த மணப்பெண் சௌந்தா்யா நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

News image
காதல் திருமணம் செய்துகொண்ட அதிமுக எம்எல்ஏ அபிரபு.
Updated On :9 அக்டோபர் 2020, 5:17 am

DIN

சென்னை: கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரபு திருமணம் செய்த மணப்பெண் சௌந்தா்யா நீதிமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நேரில் ஆஜர்படுத்தப்பட்டார்.

எம்எல்ஏ பிரபுவின் மனைவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில்,  இன்று காலை சௌந்தர்யா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தியாகதுருகத்தைச் சோ்ந்த சுவாமிநாதன் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், ‘எனது மகள் சௌந்தா்யா, திருச்செங்கோட்டில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். என்னுடைய மகளை கள்ளக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் பிரபு ஆசைவாா்த்தைகள் கூறி, கடத்தி உள்ளாா். இதுதொடா்பாக காவல்துறையில் புகாா் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேவேளையில் எனக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. எனவே, மாயமான எனது மகளை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த காவல் துறையினருக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணைக்குப் பட்டியலிடப்படாததால் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வழக்கை விசாரணைக்கு எடுக்கக் கோரி முறையிடப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், சௌந்தா்யாவை வெள்ளிக்கிழமை (அக்.9) ஆஜா்படுத்த உத்தரவிட்டனா். அவரின் தந்தை சுவாமிநாதனையும் ஆஜா்படுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்திருந்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.