தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

கொடைக்கானலில் இடியுடன் பலத்த மழை

கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில் இன்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

News image

கொடைக்கானலில் மேக மூட்டத்துடன் மழை பெய்தது

Updated On :9 அக்டோபர் 2020, 11:07 am

கொடைக்கானலில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 

கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக மழை இல்லாமல் இருந்தது. இதனால் பகல் நேரங்களில் நல்ல வெயிலும், மாலை மற்றும் இரவு நேரங்களில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து மேக மூட்டம் நிலவியது.

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மிதமான வெயிலும், மேகமூட்டமும் காணப்பட்டது. தொடர்ந்து, திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது. பின்னர் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

இந்த மழையானது கொடைக்கானல், பாம்பார்புரம், வட்டக்கானல், செண்பகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. தற்போது பெய்த மழையால் பனியின் தாக்கம் குறையும் நிலை இருப்பதால் பொதுமக்கள் சற்று மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.