இ-பாஸ் பெற வலியுறுத்துவது ஏன்? : தமிழக அரசுக்கு கேள்வி

மாநிலங்களுக்கு இடையே மக்கள் சென்று வர இ-பாஸை தமிழக அரசு வலியுறுத்துவது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்)

மாநிலங்களுக்கு இடையே மக்கள் சென்று வர இ-பாஸை தமிழக அரசு வலியுறுத்துவது ஏன் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் மக்கள் பயணம் மேற்கொள்ள இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. எனினும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அடுத்தடுத்தக்கட்ட தளர்வுகளைத்தொடர்ந்து மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸை தமிழக அரசு ரத்து செய்தது.

எனினும் மாநிலங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறையில் உள்ளது. இதனால், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாநிலங்களுக்கு இடையிலான மக்கள் போக்குவரத்திற்கு மத்திய அரசு நிபந்தனைகளை விதிக்காத நிலையில், தமிழக அரசு இ-பாஸ் பெற அறிவுறுத்துவது ஏன்? என்று கேள்வி எழுப்பியது. மேலும், இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு  செப்டம்பர் 12-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com