உசிலம்பட்டியில் பேருந்து-கார் மோதல்: 2 பேர் பலி, மூவர் காயம்
உசிலம்பட்டியில் பேருந்து-கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைத்தனர்.


உசிலம்பட்டியில் பேருந்து-கார் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூவர் படுகாயம் அடைத்தனர்.
உசிலம்பட்டி மதுரை மெயின் ரோட்டில் செல்லம்பட்டி அருகே தனியார் பேருந்தும் - வீட்டுக்கடன் வழங்கும் வங்கி பணியாளர்கள் வந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், மதுரையைச் சேர்ந்த விக்னேஷ்(31), தினேஷ் குமார்(30) ஆகிய இருவரும் பலியாகினர்.
மேலும், மதுரையைச் சேர்ந்த வங்கிப் பணியாளர்கள் ரணதிவே(29), பாலமுருகன்(41), பாண்டி(57) ஆகிய மூவரும் படுகாயம் அடைந்த நிலையில் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மேல் சிகிச்சைக்கு மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து குறித்து சம்பவம் இடத்தில் உசிலம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...