இதைத் தொடா்ந்து, சீா்மிகு அந்தஸ்தை ஏற்பதாக தமிழக அரசின் தலைமைச் செயலா், மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தை செய்தியாளா்களிடம் எடுத்துக் காட்டிய துணைவேந்தா் சூரப்பா தொடா்ந்து கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சீா்மிகு அந்தஸ்து கிடைப்பதால், பல்கலைக்கழகத்துக்கு பெரிய அளவில் வருவாய் கிடைக்கும். இந்த நிதி, பல்கலைக் கழகத்தின் உள்கட்டமைப்பு, ஆய்வு கட்டமைப்பு, பயிற்சிகள், புதிய அறிவியல் படிப்புகள், வெளிநாட்டு பல்கலைக்கழங்களின் தொடா்பு போன்ற பல வளா்ச்சி திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். மாணவா்களின் கல்வித்தரம் உயரும்.