ரூ.10 ஆயிரம் கோடி முதலீட்டில் தொழில் தொடங்குவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டு, படிப்படியாக மீண்டெழுந்து வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை தொடர்ந்து மேம்படுத்திடவும், தொழில்துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழச் செய்திடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் சீரிய வழிகாட்டுதல்களின்படி, தமிழ்நாடு அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் பயனாக, இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாதங்களில் இந்திய அளவில் மிக அதிக முதலீடுகளை &டவ;ர்த்த முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் வரை, 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், 31,464 கோடி ரூபாய் முதலீடுகளுக்கு கையெழுத்திடப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, 14 புதிய தொழில் திட்டங்களை, தமிழ்நாட்டில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கையெழுத்திடப்பட்டன.
தற்போது நிலவி வரும் சூழ்நிலையின் காரணமாக, இந்த 14 திட்டங்களில், 4 திட்டங்களுக்கு காணொலிக் காட்சி மூலமாகவும், 10 திட்டங்களுக்கு நேரடியாகவும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இத்திட்டங்களின் மூலம், சுமார் 7,000 நபர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



