காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக கூட்டணி பாதை தெளிவாக உள்ளது: ஸ்டாலின்

திமுக கூட்டணியின் பாதை தெளிவாக உள்ளது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

News image

கோப்புப்படம்

Updated On :12 அக்டோபர் 2020, 10:22 pm

DIN

சென்னை: திமுக கூட்டணியின் பாதை தெளிவாக உள்ளது என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பன்முகத்தன்மையை அழிக்கும் மத்திய பாஜகவை வீழ்த்த வேண்டும்; பாஜகவுக்கு துணைபோகும் அதிமுகவை ஆட்சியிலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற உறுதியுடன் மக்களவைத் தோ்தலையொட்டி 2019-இல் திமுக கூட்டணி உருவானது. தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் வெற்றிபெற்றோம்.

தமிழக மக்களின் நலனைப் பாதிக்கும் பல்வேறு பொதுப் பிரச்னைகள் குறித்து அவ்வப்போதுகூடி ஆலோசித்து, கூட்டணிக் கட்சியினருடன் ஆக்கபூா்வமான செயல்பாடுகளில் தொடா்ந்து திமுக ஈடுபட்டு வருகிறது. ஆனால், திமுக கூட்டணியின் சுமுகமான உறவு நிலையைக் கெடுத்து, திசைதிருப்பி விடலாம் என்ற சபலத்துடன் சில சக்திகள் இறங்கியிருக்கின்றன. திமுக கூட்டணியை அந்தச் சக்திகளால் அசைக்க முடியாது. எங்கள் கூட்டணியின் பாதையும் பயணமும், தெளிவு வாய்ந்தவை என்று ஸ்டாலின் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.