சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சிவகங்கை அருகே சாலை விபத்து: திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட இருவர் பலி

சிவகங்கை அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட இருவர் உயிரிழந்தனர்.

News image
சாலை விபத்தில் உயிரிழந்த மனோகரன் மற்றும் தைபுதீன்
Updated On :13 அக்டோபர் 2020, 5:46 am

DIN

சிவகங்கை அருகே செவ்வாய்க்கிழமை காலை சரக்கு வாகனமும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் திமுக முன்னாள் எம்எல்ஏ உள்பட இருவர் உயிரிழந்தனர்.

சிவகங்கை பகத்சிங் தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மனோகரன்(66). திமுக முன்னாள் எம்எல்ஏ-வான இருவரும், அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஹனிபா மகன் தைபுதீன்(42) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை சிவகங்கையிலிருந்து மதுரைக்குச் சென்றுள்ளனர். படமாத்தூர் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம், இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், பலத்த காயமடைந்த மனோகரன், தைபுதீன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுபற்றி தகவலறிந்த பூவந்தி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து பூவந்தி காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.