நிகழாண்டு மூன்றாவது முறையாக ராமநதி அணை நிரம்பியதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
நிகழாண்டு மூன்றாவது முறையாக ராமநதி அணை நிரம்பியதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

பாபநாசம் அணை நீர்மட்டம்: 2-வது முறையாக 100 அடி தாண்டியது

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சாரல் மழை பெய்ததையடுத்து பாபநாசம் அணையில் நீர்மட்டம் நிகழாண்டில் இரண்டாவது முறையாக நூறு அடியைக் கடந்துள்ளது.

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சாரல் மழை பெய்ததையடுத்து பாபநாசம் அணையில் நீர்மட்டம் நிகழாண்டில் இரண்டாவது முறையாக நூறு அடியைக் கடந்துள்ளது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மூன்றாவது நாளாக மழை பெய்தது. இதையடுத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. 

வியாழக்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணைக்கு 5940.506 கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் அணையின் நீர் இருப்பு நிகழாண்டு இரண்டாவது முறையாக நூறு அடியைக் கடந்து 101.40 அடியாக இருந்தது. அணையில் இருந்து 506 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

சேர்வலாறு அணையின் நீர் இருப்பு 122.64 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையில் நீர்வரத்து 1464 கன அடியாகவும், நீர் இருப்பு 70.90 அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீர்வரத்து 217 கன அடியாகவும், நீர் இருப்பு 35.50 அடியாகவும், நீர் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

கடனாநதி அணையில் நீர்வரத்து 490 கன அடியாகவும், நீர் இருப்பு 80 அடியாகவும், நீர் வெளியேற்றம் 75 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணையில் நீர் வரத்து 399.67 அடியாக இருந்தது. அணையில் நீர் இருப்பு நிகழாண்டு மூன்றாவது முறையாக முழுக்கொள்ளளவை எட்டியது. அணையில் இருந்து 140 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கருப்பா நதி அணையில் நீர் வரத்து 77 கன அடியாகவும் நீர் இருப்பு 69.23 அடியாகவும், நீர் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை முழுக்கொள்ளளவான 36.10 அடியாக உள்ள நிலையில், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 31 கன அடியாகவும் இருந்தது. அடவி நயினார் அணையில் நீர் இருப்பு 132.10 அடியாக உள்ள நிலையில், நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் 120 கன அடியாக இருந்தது.

ராமநதி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து உபநீர் திறந்துவிடப்படும் அளவு கூடவோ குறையவோ செய்யும் என்றும் ராமநதி ஆற்றங்கரையோரம் உள்ள கிராம மக்கள் தங்கள் கால்நடைகளை ஆற்றிற்குள் விடாமல் எச்சரிக்கையுடன் இருக்கும் படியும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

அணைப் பாதுகாப்பு பணிகளில் உதவிப் பொறியாளர் முருகேசன், நீர் பாசன  பிரிவு உதவி பொறியாளர் சரவணகுமார், அணைப் பணியாளர்கள் ஜோசப், பாக்கியராஜ், மகேந்திரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்):
திருநெல்வேலி: பாபநாசம் 28, சேர்வலாறு 27, மணிமுத்தாறு 3.6, கொடுமுடியாறு 23, அம்பாசமுத்திரம் 3, சேரன்மகாதேவி 1, நாங்குநேரி 1.50, ராதாபுரம் 13, திருநெல்வேலி 1.

தென்காசி: கடனாநதி 22, ராமநதி 35, கருப்பா நதி 19.5, குண்டாறு 35, அடவிநயினார் 30, ஆய்குடி 6.20, செங்கோட்டை 18, சிவகிரி 1, தென்காசி 16.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com