எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பல்லடம் ஒன்றியத்தில் ரூ.294 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் துவக்கம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் ரூ.294.72 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.

News image
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் சாலை அமைக்கும் பணியை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் பூமி பூஜை நடத்தி வியாழக்கிழமை துவக்கி வைத்தா
Updated On :22 அக்டோபர் 2020, 5:29 am

DIN


பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்தில் ரூ.294.72 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடத்தப்பட்டு பணிகள் துவக்கப்பட்டன.

பல்லடம் ஒன்றியம் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி மகாலட்சுமி நகரில் ரூ.31.04 லட்சம் மதிப்பில் 1,2,3,4 ஆகிய வீதிகளில் தார் சாலை அமைத்தல், கணபதிபாளையம் ஊராட்சி குங்குமம்பாளையத்தில் ரேசன் கடை அருகில் ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சிறுபாலம் அமைத்தல், கவுண்டம்பாளையம் ஏ.டி.காலனியில் ரூ.5 லட்சத்தில் கழிவறை அமைத்தல், பெத்தாம்பாளையத்தில் திருப்பூர் - பொங்கலூர் சாலையில் ரூ.25.15 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், கரைப்புதூர் ஊராட்சி சென்னிமலைபாளையம் ஏ.டி.காலனியில் ரூ.19லட்சம் மதிப்பில் கழிவு நீர் கால்வாய் அமைத்தல், திருப்பூர் - பொங்கலூர் சாலையில் ரூ.9.49 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைத்தல், சரவணாபுரத்தில் ரூ.4.48 லட்சம் மதிப்பில் இரண்டு வீதிகளில் ஒரடுக்கு கப்பி சாலை அமைத்தல், குப்புச்சிபாளையம் பிரதான சாலையில் ரூ.11.81 லட்சம் மதிப்பில் பேவர் ப்ளாக் அமைத்தல், அய்யம்பாளையம் ஏ.டி.காலனியில் ரூ.13.32 லட்சம் மதிப்பில் கப்பி சாலை அமைத்தல், உப்பிலிபாளையம் ஏ.டி.காலனியில் ரூ.31.85 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்தல், கரைப்புதூர் ஏ.டி.காலனியில் ரூ.21.84 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் மற்றும் கழிவு நீர் கால்வாய் அமைத்தல், அதே பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடம் அருகில் ரூ.4.12 லட்சம் மதிப்பில் கப்பி சாலை அமைத்தல், 63 வேலம்பாளையம் ஊராட்சியில் ரூ.112.62 லட்சம் மதிப்பில் மரக்காடு வழியாக வேலம்பாளையம் முதல் மாணிக்காபுரம் இணைப்பு சாலை அமைத்தல் ஆக மொத்தம் ரூ.294.72 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடத்தி திட்டப்பணிகளை பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் துவக்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.சித்துராஜ், பல்லடம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் கந்தசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் பானுப்பிரியா, ஒன்றிய பொறியாளர்கள் செந்தில்குமார், கற்பகம், ஊராட்சி ஒன்றிய துனைத் தலைவர் பாலசுப்பிரமணியம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் நடராஜ், ஜெயந்தி கோவிந்தராஜ், பாரதி சின்னப்பன், மற்றும் உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள்  உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.