47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் வேதனையளிக்கிறது: துணை முதல்வர் பன்னீர்செல்வம்

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :23 அக்டோபர் 2020, 1:53 pm

DIN

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் பகுதியிலுள்ள பட்டாசு ஆலை ஒன்றில் மணி மருந்து கலவையில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக இன்று தீவிபத்து ஏற்பட்டது. விபத்து குறித்துத் தகவலறிந்த விருதுநகர் தீயணைப்புத்துறையினர் பட்டாசு ஆலையில் மேலும் தீ பரவாமல் அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கல்லுப்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த மூன்று பேர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 
இந்த நியில் விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 5 பேர் இறந்த சம்பவம் வேதனையளிக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் தனது சுட்டுரையில், விருதுநகர் - எரிச்சநத்தத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட எதிர்பாரா வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இத்துயர சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொண்டு, காயமுற்றோர் விரைவில் நலம்பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.