ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்: ஸ்டாலின் மீது வழக்கு

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின்.

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக மு.க.ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடதுக்கீடு வழங்க வகைசெய்யும் தமிழக அரசின் மசோதாவுக்கு விரைந்து ஒப்புதல் தரக்கோரி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க எம்பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, தி.மு.க எம்எல்ஏக்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பொன்முடி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com