சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதல்: 2 பேர் பலி; 3 பேர் காயம்

உசிலம்பட்டி தேனி மெயின் ரோடு தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு மினி லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். 

News image
இருசக்கர வாகனம் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.
Updated On :24 அக்டோபர் 2020, 2:59 am

DIN



உசிலம்பட்டி:  உசிலம்பட்டி தேனி மெயின் ரோடு தொட்டப்பநாயக்கனூர் விலக்கில் வெள்ளிக்கிழமை இரவு மினி லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர், 3 பேர் காயமடைந்தனர். 

தேனி அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் முருகன்(50), உசிலம்பட்டி வெள்ளை மலைபட்டியைச் சேர்ந்த வெள்ளைச் சாமி மகன் விவித் (25) ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழை இரவு 11 மணியளவில், உசிலம்பட்டி தேனி மெயின் ரோடு தொட்டப்பநாயக்கனூர் விலக்கு பகுதியில்   சென்றுகொண்டிருந்த போது, மதுரையில் இருந்து கடமலைக்குண்டுக்கு சென்றுகொண்டிருந்த மினி லாரியும் நேருக்கு நேர் மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற முருகன், விவித் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 

மினி லாரி கவிழ்ந்ததில் லாரியில் இருந்த தேனி மாவட்டம் அம்பாசமுத்திரத்தை சேர்ந்த செல்வமணி (14),கோவிந்தராஜ்(45), பெருமாள்(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். 

காயமடைந்த மூவரும் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த விபத்து குறித்து சிலம்பட்டி தாலுகா காவல்நிலைய காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.