மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், சோலைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, மரம் விழுந்ததில் உயிரிழந்தார். சென்னை மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் தமிழரசன் என்பவர் கடலில் குளிக்கும் போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தார். கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டம், அன்னூர் வருவாய் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் மகன் கதிரேசன், துரைசாமி மகன் ரகுராம் மற்றும் முகுந்தராஜ் மகன் பிரேனஷ் ஆகிய மூன்று பேரும் பவானி ஆற்றின் நீர்த்தேக்கப் பகுதியில் குளித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.