ஆதார் அட்டையில் தமிழ் வாசகம் நீக்கம்: கனிமொழி கண்டனம்

ஆதார் அட்டையில் தமிழுக்கு பதில் இந்தியில் வாசம் அச்சிடப்பட்டிருப்பதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கனிமொழி
கனிமொழி

ஆதார் அட்டையில் தமிழுக்கு பதில் இந்தியில் வாசம் அச்சிடப்பட்டிருப்பதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வழங்கப்பட்ட புதிய ஆதார் அட்டையில், ‘எனது ஆதார் எனது அடையாளம்’ என்ற தமிழ் வாசகங்களுக்கு பதிலாக இந்தியில் அச்சடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி தனது சுட்டுரையில், அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழியில் எதை வேண்டுமானாலும், ஆதாருக்காக தேர்ந்தெடுக்கலாம் என்ற உறுதிமொழியோடு கட்டாயமாக்கப்பட்ட ஆதாரில் இன்று மாநில மொழிகள் நீக்கப்பட்டுள்ளன. 
ஆதார் அட்டையை புதுப்பிப்போர் மற்றும் புதிய அட்டைகள் பெறுவோருக்கு வழங்கப்படும் ஆதார் அட்டையில், எனது ஆதார், எனது அடையாளர் என்ற வாசகம் இந்தியில் மாற்றப்பட்டுள்ளது. 
மாநில உணர்வுகள் இப்படித்தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com