தொடர் விடுமுறை: அக்.29-ல் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிப்பு
பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமையன்று மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.


சென்னை: பொதுமக்களின் வசதிக்காக அக்டோபர் 29-ம் தேதி வியாழக்கிழமையன்று மட்டும் சென்னை மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தொடர் விடுமுறை காரணமாக நாளை (அக்.29) வியாழக்கிழமை மட்டும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 11 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...