ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

செப். 9ல் திமுக பொதுக்குழு கூட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு

திமுக பொதுக்குழு கூட்டம் வருகிற செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

News image
மு.க.ஸ்டாலின்
Updated On :1 செப்டம்பர் 2020, 6:33 am

DIN

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 ஆம் தேதியும், பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு செய்வது குறித்து கட்சியின் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 9 ஆம் தேதி (புதன்கிழமை) காலை  10.30 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் நடைபெறும் என்றும் கழக உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோன்று திமுக மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் செப்டம்பர் 3 (வியாழக்கிழமை) அன்று காலை 10:30 மணியளவில், காணொலி வாயிலாக நடைபெறும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.