அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கி மாமியார், மருமகள் உயிரிழப்பு
அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கிய மருமகளைக் காப்பாற்றச் சென்ற மாமியார் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.


அறந்தாங்கி அருகே மின்சாரம் தாக்கிய மருமகளைக் காப்பாற்றச் சென்ற மாமியார் மீதும் மின்சாரம் தாக்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆளப்பிறந்தான் கிராமத்தைச் சேர்ந்த மகாதேவன் மனைவி ராதிகா (31).
இவர்கள் வீட்டு வளாகத்திலுள்ள கம்பிவேலியில் திங்கள்கிழமை இரவு பெய்த மழை காரணமாக மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது.
இதையறியாமல் செவ்வாய்க்கிழமை காலை, ராதிகா கம்பி வேலியைத் தவறி தொட்டுள்ளார். மின்சாரம் தாக்கியுள்ளது. சப்தம் கேட்டு வந்த ராதிகாவின் மாமியார் ராஜகோகிலம் (65) மருமகளைக் காப்பாற்ற முயற்சித்து அவரும் மின் தாக்குதலில் சிக்கினார். இருவரும் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர்.
அறந்தாங்கி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...