தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

'தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக்கூட அரசை கேள்வி கேட்க உரிமை இல்லை' - கனிமொழி

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

News image

கனிமொழி

Updated On :2 செப்டம்பர் 2020, 10:48 am

DIN

நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். 

கரோனா தொற்றுப் பரவலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 18 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற ஊழியர்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்கேற்க இருப்பதால் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற அவை தொடங்குவதற்கு முன்னதாக, கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது. 

மேலும், கூட்டத் தொடரில் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் தீர்மானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அரசின் முடிவு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்ற கருத்து மேலோங்கி வருகிறது. 

இதையடுத்து திமுக எம்.பி. கனிமொழி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தை ரத்து செய்துள்ள பாஜக அரசின் முடிவு, "மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக்கூட அரசாங்கத்தை கேள்வி கேட்க உரிமை இல்லை” என்ற ஒற்றைச் செய்தியை தெளிவாக எடுத்துரைக்கிறது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.