கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சென்னையில் சொத்துவரி, தொழில்வரி செலுத்த செப். 30 வரை அவகாசம்

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செப். 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

News image
சென்னையில் சொத்துவரி, தொழில்வரி செலுத்த செப். 30 வரை அவகாசம்
Updated On :2 செப்டம்பர் 2020, 12:58 pm

DIN

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு செலுத்த வேண்டிய தொகையை செப். 30க்குள் அபராதமின்றி செலுத்தலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் செய்திக் குறிப்பொன்றில், பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் துறையின் முக்கிய வருவாய் இனங்களான சொத்துவரி, தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தல் உட்பட வரி வருவாய் இனங்கள், வரி வருவாய் அல்லாத இனங்கள் / கட்டணங்கள் சென்ற நிதி (2019-20) ஆண்டின் 31.03.2020க்குள் சொத்து உரிமையாளர்கள்/நிறுவனதாரர்களால் சட்ட விதிகளின்படி செலுத்தப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேற்படி வரிவருவாய் இனங்களை வசூலிக்க இயலாத சூழ்நிலையில், செலுத்த வேண்டிய வரிவருவாய் இனங்களை (தொழில்வரி, தொழில் உரிமம் உட்பட), எவ்வித தண்டத்தொகையும் விதிக்கப்படாமல் செலுத்த ஏதுவாக காலக்கெடு 30.06.2020 வரை ஒத்திவைக்க அரசால் ஆணையிடப்பட்டது.

இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி (தொழில்வரி மற்றும் தொழில் உரிமம் புதுப்பித்தலுக்கு) எவ்வித அபராதம் மற்றும் தண்டத்தொகையின்றி 30.09.2020 க்குள் செலுத்தலாம் என ஆணையாளர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.