ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

வாக்காளர் பட்டியல்: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை

வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்துகிறார்.

News image
மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு ஆலோசனை
Updated On :3 செப்டம்பர் 2020, 9:46 am

DIN


வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்துகிறார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து காணொலி காட்சி மூலம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜனவரி மாதம் 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும், 2020 - நவம்பர் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், நவம்பர் 16-ம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.