தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

திருச்சியில் அமைச்சருக்கு எதிரான போஸ்டரால் பரபரப்பு!

திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 4:30 am


திருச்சி: திருச்சியில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுக-வில் திருச்சி மாவட்டமானது மாநகர் மாவட்டம், புறநகர் வடக்கு மாவட்டம், புறநகர் தெற்கு மாவட்டம் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மாநகர் மாவட்ட செயலராக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன் பதவி வகித்து வருகிறார். 

மாநகர் மாவட்ட அதிமுக-வில் பகுதி செயலர்கள் அண்மையில் மாற்றப்பட்டனர். இதில், பாலக்கரை பகுதி செயலராக இருந்த டி.ஏ.எஸ். கலீல் ரஹ்மானும் நீக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் திருச்சியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

இஸ்லாமியர்களை மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், அமைச்சருமான வெல்லமண்டி என். நடராஜன் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், எனவே, வரும் பேரவைத் தேர்தலில் அமைச்சரையும், அதிமுக-வையும் புறக்கணிப்போம் என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 

இஸ்லாமிய ஐக்கிய ஜமாத், திருச்சி மாவட்டம் என்ற பெயரில் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.