மேட்டூா் அணைக்கு நீர்வரத்து 11.735 கன அடியாக குறைந்தது
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத் தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 11.735 கன அடியாக குறைந்தது.


காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழைத் தணிந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை 11.735 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக லேசான மழை பெய்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வந்தது. வெள்ளிக்கிழம் இரவு முதல் மழைத் தணிந்ததால் சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 17,790 கன அடியாக குறைந்தது
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அணைக்கு வரும் நீரின் அளவு 11.735 கன அடியாக குறைந்தது. அணையின் நீா்மட்டம் 91.02 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 54.1 டிஎம்சி ஆக உள்ளது.
மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்ததால், காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 6,700 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...