ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவை இயக்கம்

சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது. 

News image
சென்னை மெட்ரோ
Updated On :7 செப்டம்பர் 2020, 3:57 am

DIN

சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவை திங்கள்கிழமை காலை தொடங்கியது. 

கரோனா தொற்று பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த மாா்ச் மாதம் இறுதி வாரம் முதல் தற்காலிகமாக நிறுவத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு கட்டங்களாக பொது முடக்கத்தில் தளா்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மெட்ரோ ரயில் சேவையை திங்கள்கிழமை (செப்டம்பா் 7) முதல் தொடங்கலாம் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னையில் 168 நாள்களுக்குப் பிறகு மெட்ரோ ரயில் சேவைகள் இன்று காலை மீண்டும் தொடங்கியது. தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத் மெட்ரோ ஏற்பாடுகளை ஆய்வு செய்து முதல் சேவையை தொடங்கி வைத்தார். சென்னையில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பயணிகளின் பாதுகாப்புக்காக அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் அடிக்கடி கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யப்படும். 

சுத்தமான காற்று சுழற்சியை அதிகரிக்கவும், தனி மனித இடைவெளியைப் பின்பற்றி பயணிகள் மெட்ரோ ரயிலில் ஏற, இறங்கவும் மெட்ரோ ரயில் நிலையங்களில் ரயில்கள் நிறுத்தப்படும் நேரம் 20 விநாடியில் இருந்து 50 விநாடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் முதல்கட்ட திட்டத்தில் மொத்தம் 42 ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். தற்போது 5 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் நிலையில், பயணிகள் தேவைக்கு ஏற்ப இந்த ரயில்களின் எண்ணிக்கை உயர்த்தப்படவுள்ளதாக மெட்ரோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.