வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

திமுக பொதுக்குழுக் கூட்டம்: தேனி மாவட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்

சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தின் காணொலிக் காட்சியில் தேனி மாவட்ட திமுகவினர் கம்பத்தில் கலந்து கொண்டனர்.

News image
திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்ட தேனி மாவட்ட திமுகவினர்
Updated On :9 செப்டம்பர் 2020, 10:10 am

DIN

கம்பம்: சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தின் காணொலிக் காட்சியில் தேனி மாவட்ட திமுகவினர் கம்பத்தில் கலந்து கொண்டனர்.

திமுக மாநில பொதுக்குழு கூட்டம் சென்னையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கரோனா தொற்று அபாயத்தால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்டங்களிலேயே காணொலிக் காட்சி மூலம் பங்கேற்க தலைமை அறிவுறுத்தியது.

அதனடிப்படையில் தேனி மாவட்ட திமுகவினர் கம்பம் நடராஜன் திருமண மண்டபத்தில் நடைபெற்ற காணொலிக் காட்சியில் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட திமுக பொறுப்பாளர் என்.ராமகிருஷ்ணன், கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்,  முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் எல்.மூக்கையா, எம்.ஜெயக்குமார் உள்ளிட்ட 58 பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.