நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கம்பத்தில் உழவர் சந்தை திறப்பு: விவசாயிகள் 3 பேருக்கு தொற்று உறுதி

தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை புதன்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. இதில் கடை அமைத்துள்ள  3 விவசாயிகளுக்கு தொற்று உறுதி ஆனதால் கடைகள் மூடப்பட்டது. 

News image

கம்பம் உழவர் சந்தை

Updated On :9 செப்டம்பர் 2020, 8:41 am

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் உழவர் சந்தை புதன்கிழமை முதல் செயல்படத் துவங்கியது. இதில் கடை அமைத்துள்ள  3 விவசாயிகளுக்கு தொற்று உறுதி ஆனதால் கடைகள் மூடப்பட்டது. 

தேனி மாவட்டத்தில் பொது முடக்கம் காரணமாக உழவர் சந்தைகள் அடைக்கப்பட்டது.தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் காரணமாக புதன்கிழமை முதல் கம்பம் உழவர் சந்தை செயல்படத் துவங்கியது. மொத்தமுள்ள 140 கடைகளில் 32 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளிடம் மாதிரி எடுக்கப்பட்டது. அதில், செவ்வாய்க்கிழமை முடிவுகள் வந்ததில், உழவர் சந்தை விவசாயிகள் மூன்று பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

இதனால் அவர்களுக்கு புதன்கிழமை கடைகள் வழங்கப்படவில்லை.  மற்ற விவசாயிகள் சமூக இடைவெளி விட்டு கடைகளை அமைத்தனர். நிர்வாக அலுவலர் கண்ணதாசன் தலைமையில் கிருமிநாசினி தெளித்தும்,  முகக்கவசம் அணிந்து கடைக்காரர்கள் மற்றும் பொதுமக்கள் வருமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.