நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சுங்குவார்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்து ஒருவர் பலி

சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

News image

சுங்குவார்சத்திரம் அருகே மின்னல் பாய்ந்து ஒருவர் பலி

Updated On :9 செப்டம்பர் 2020, 9:48 am

DIN

ஸ்ரீபெரும்புதூர்: சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார்.

சுங்குவார்சத்திரம் அடுத்த சிறுமாங்காடு கன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(30). இவர் கறவை பசுக்கள் வைத்து பால் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை சுங்குவார்சத்திரம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்த  நிலையில், பால் கறக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சந்திரசேகர் மீது மின்னல் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். 

இதையடுத்து, அவரது உறவினர்கள் சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சந்திரசேகரை தூக்கி வந்துள்ளனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலீஸார் சந்திரசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.