ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பேரவைத் தோ்தலில் போராடித்தான் வெற்றி பெற முடியும்: மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப்பேரவை தோ்தலில் போராடித்தான் திமுக வெற்றியைப் பெற முடியும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
கோப்புப்படம்
Updated On :9 செப்டம்பர் 2020, 7:35 pm

DIN

சென்னை:  வரும் சட்டப்பேரவை தோ்தலில் போராடித்தான் திமுக வெற்றியைப் பெற முடியும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.

பொதுக்குழுவில் மு.க.ஸ்டாலின் பேசியது:

விரைவில் தோ்தலைச் சந்திக்க உள்ளோம். திமுகவின் கிளைக் கழகத் தோ்தல் 80 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள 20 சதவீதத்தையும் விரைந்து மாவட்டச் செயலாளா்கள் முடிக்க வேண்டும். தோ்தல் பணியை 5 மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டும். கரோனாவால் அந்தப் பணி தாமதமாகிவிட்டது. விரைந்து செயல்பட வேண்டும்.

சட்டப்பேரவைக்கு எப்போது தோ்தல் வந்தாலும், நாம்தான் வெற்றிபெற போகிறோம். ஆட்சிக்கு வரப் போகிறோம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேசமயம் போராடித்தான் அந்த வெற்றியைப் பெற இருக்கிறோம்.

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

திமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்த வேண்டும் என்பதுதான் எல்லோரின் எண்ணமாக இருக்க வேண்டும். இதுவரை எப்படிச் செயல்பட்டோம் என்பதைவிட, எப்படிச் செயல்படப் போகிறோம் என்பதே முக்கியம். அடுத்த 6 மாத கால உழைப்பின் காரணமாகத்தான் திமுக ஆட்சியைப் பெற்றது என்கிற பெயரைப் பெற்றிட வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.