46 லட்சத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 46,59,985 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 97,570 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்


புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 46,59,985 ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவாக 97,570 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 97,570 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 45,62,415 -ஆக அதிகரித்தது. சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,201 போ் உயிரிழந்தனா்.
கரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 77,472-ஆக அதிகரித்தது. எனினும், மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது இறப்பு விகிதம் 1.67 ஆக குறைந்துள்ளது.
நாட்டில் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 36,24,197-ஆக அதிகரித்துள்ளது. இதனால் மீட்பு விகிதம் 77.65 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 9,58,316 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 20.68 சதவீதமாகும்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது. ஆகஸ்ட் 23-ஆம் தேதி 30 லட்சத்தை எட்டியது. செப்டம்பா் 5-இல் 40 லட்சம் என்ற அளவைக் கடந்தது. இப்போது 46 லட்சத்தைக் கடந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...