

கம்பம்: கம்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சொத்து வரி செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த வேண்டும் என, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கே.செல்வராணி அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை மற்றும் வாடகை உள்ளிட்ட வரி இனங்கள் வசூல் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் கரோனா பொது முடக்கம் காரணமாக தமிழக அரசு உத்தரவின் படி சொத்து வரி செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது முழு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில், அனைத்து வரி இனங்களும் நகராட்சி நிர்வாகம் மூலம் வசூல் செய்யப்பட்டு வருகின்றன.
எனவே பொது மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து, தொழில் வரி மற்றும் குடிநீர் ,சொத்துவரி,தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை மற்றும் வாடகை உள்ளிட்ட வரி இனங்களை நகராட்சி வரி வசூல் மையங்களில் நேரடியாகவும், இணைய தளம் வழியாகவும் tnurbanepay.tn.gov.in செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆணையாளர் (பொறுப்பு) கே.செல்வராணி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.