வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை அதிர்ச்சி அளிக்கிறது: மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

News image
மு.க.ஸ்டாலின.
Updated On :12 செப்டம்பர் 2020, 4:33 pm

DIN

நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் முருகசுந்தரம். இவர் 6 ஆவது பட்டாலின் படைப்பிரிவில் காவல் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரின் மகள் ஜோதி துர்கா (18) கடந்த 2019 ஆம் ஆண்டு அருப்புக்கோட்டையில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வு எழுதினார். ஆனால் அவரால் தேர்ச்சி பெறமுடியவில்லை. இதையடுத்து நடப்பாண்டு, நீட் தேர்வில் கண்டிப்பாக தேர்ச்சி பெற்று விட வேண்டும் என கடந்த ஒரு ஆண்டாக படித்து வந்த அவர் மன அழுத்தத்தால் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூலில், நீட் தேர்வு அச்சம் காரணமாக மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

"எல்லோருமே என்கிட்ட ரொம்ப எதிர்பார்த்தீங்க; ஆனா எனக்குத்தான் பயமா இருக்கு" என்று அவர் பேசிய ஆடியோ, நீட் தேர்வின் கோர முகத்தைக் காட்டுகிறது.

ஒரு தேர்வு, மாணவ சமுதாயத்தின் மனங்களை நிலைகுலைய வைப்பதாக இருப்பதை, அனிதா முதல் ஜோதிஸ்ரீ துர்கா மரணம் வரை உணர முடிகிறது.

தற்கொலை என்பது தீர்வல்ல என்று மீண்டும் சொல்கிறேன்!

நீட் என்பது ஒரு தேர்வே அல்ல என்பதை, மீண்டும் மீண்டும் சொல்கிறேன்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.