ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நீட் தேர்வு: நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நாளை நடத்தப்படும் என திமுக பொருளாளரும், மக்களவை உறுப்பினருமான டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். 

News image
டி.ஆர். பாலு
Updated On :13 செப்டம்பர் 2020, 11:13 am

DIN

நீட் தேர்வை பிரச்னை தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் திமுக சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மக்களவை உறுப்பினரும், திமுக பொருளாளருமான டி.ஆர். பாலு அறிவித்துள்ளார். 

மேலும், இதுதொடர்பாக தோழமைக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் நாளை காலை 8 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் நீட் தேர்வு பிரச்னை குறித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக, நாடு முழுவதும் 154 நகரங்களில் உள்ள 3,842 மையங்களில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் 1,17,990 போ் உள்பட இந்தியா முழுவதும் 15,97,433 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில்  14 நகரங்களில் 238 தோ்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. 

நீட் தேர்வு பயம் மற்றும் மன அழுத்தத்தால் தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தமிழக மக்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.