டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஒரே நாளில் 94,372 பேருக்கு கரோனா: 1,114 பேர் பலி

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 94,372 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 4:27 am

DIN

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 94,372 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 94,372 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 47,54,357-ஆக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 1,114 போ் உயிரிழந்தனா்.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த உயிரிழப்பு 78,586-ஆக அதிகரித்துள்ளது.  இது கரோனா பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 1.66 சதவீதம் ஆகும்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 37,02,596-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் சுமாா் 60 சதவீதம் போ் மகாராஷ்டிரம், தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தோா் ஆவா்.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 77.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் தற்போது 9,73,175 போ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

நாட்டில் கடந்த சனிக்கிழமை ஒரே நாளில் 10,71,702 பேருக்கு கரோனா நோய்த்தொற்றுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 12-ஆம் தேதி வரை ஒட்டுமொத்தமாக 5,62,60,928 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.